நாகப்பட்டினம்:நாகை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்திற்கு தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என கடந்த 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இன்றளவும் அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் கடந்த மூன்று நாள்களாக தொழில் மறியல், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இரண்டாவதாக நாளாக நடைபெற்ற சாமந்தான்பேட்டை கிராம மீனவர்களின் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மீன்வளத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதிய திட்டம் தயார் செய்து தரப்படும் என அலுவலர்கள் கூறியதற்கு பழைய திட்டத்திலே கட்டுமானப் பணிகளை தொடங்கவேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.