நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக குறுவை சாகுபடி என்பது எட்டாக்கனியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்தாண்டு மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெற்றது.
தற்போது குறுவை அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல்லை கொள்முதல் செய்ய இன்று (அக்.3 ) நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 149 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. முன்னதாக கீழையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் தொடங்கிவைத்தார்.