நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோன்று இந்தாண்டு மே 3ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காத்தவராய சாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண வந்த பக்தர்கள் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டனர்.
நெல்லுக்கடை மாரியம்மன் சித்திரை திருவிழா மேலும், புனிதமான இந்தச் செடில் மரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் சுற்ற உள்ளதால், நாளை காலை வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற இருக்கிறது. தற்போது, நெல்லுக் கடை மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
தேரினை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர். நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி பக்தர்கள் பல்வேறு விதமான காவடிகளோடு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.