நாகப்பட்டினம் ஒன்றிய வாக்கு எண்ணிக்கை பணிகள் தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாகை ஒன்றியத்திற்குட்பட்ட ஐவநல்லூர் ஊராட்சி வாக்கு எண்ணிக்கை அறை எண் 6ல் நடைபெற்று வந்தது. அப்போது, ஒரு பெட்டியில் கீழையூர் ஒன்றியத்தில் உள்ள மூன்று வாக்குச் சீட்டுகள், நாகை ஒன்றிய வாக்குப் பெட்டியில் கலந்திருப்பதாகக் கூறி அதிமுகவினர் தேர்தல் அலுவலரிடம் புகாரளித்தனர்.
வாக்குச் சீட்டுக்கள் ஒன்றியம் மாறிஎப்படி வந்தது என்று விளக்கமளித்துவிட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து, நாகை ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 2 மணி நேரமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.