தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்! - நாகை சுவர் இடிந்துவழுந்து 1 காயம்

நாகை: நாகூர் அருகே கனமழை காரணமாக பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த நபர் படுகாயங்கங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

one-injured

By

Published : Oct 22, 2019, 3:19 PM IST

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதற்கிடையே நாகூரில் பனங்குடி பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் தனது வீட்டில் அம்மா, அப்பாவுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது இன்று அதிகாலை வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் கருணாநிதியின் பெற்றோர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்!

ஆனால், கருணாநிதியின் இரண்டு கால்களிலும் சுவரின் கற்கள் விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதியை நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சம்பவம் குறித்து நாகூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு... தொங்கும் பாறைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்!

ABOUT THE AUTHOR

...view details