தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ் சிறப்பு வார்டு: சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு - நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் கரோனா வைரஸ் சிறப்பு வார்டு அமைக்கப்பட்ட கட்டடத்தை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

Nagapattinam government hospital
coronavirus cleaning work

By

Published : Mar 27, 2020, 9:20 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மூன்றாவது நாளாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகளை நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். கரோனா வைரஸ் சிறப்பு வார்டு அமைக்கப்பட்ட கட்டடத்தை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா வைரஸ் சிறப்பு வார்டு: சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

முன்னதாக, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்களுக்கு மருத்துவமனை வாயிலில் கைகளை கழுவி விட்டு உள்ளே செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினர், மருத்துவர்கள், நகராட்சி அலுவலர்கள் கைகளை கழுவி சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பு: ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details