தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: 8 பேர் மீது போக்சோ! - nagai crime news

நாகை: வேளாங்கன்னி பகுதியில் 15 வயது சிறுமியை தொடர்ச்சியாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமாக்கிய எட்டு பேரில் ஐந்து பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

Nagapattinam girl child rape by eight members police arrested five members

By

Published : Nov 14, 2019, 11:46 PM IST

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் புதுச்சேரியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த மே மாத விடுமுறைக்கு வேளாங்கன்னி பகுதியில் வேலைபார்த்து வரும் தனது பெற்றோரைப் பார்க்க வந்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த தாஸ்(41) என்பவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனை அறிந்த தாஸின் நண்பர்களான சூர்யா(22), ரூபன் காரல் மார்கஸ்(20), வீரையன்(19), கோகுல்(19), பொன்னையன், முத்து, முருகன் உள்ளிட்ட எட்டு பேரும் சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் விடுமுறை முடிந்து புதுச்சேரிக்கு படிக்கச் சென்ற சிறுமி சில வாரங்களுக்கு முன்பு விடுதியில் மயங்கி விழுந்துள்ளார்.

விடுதிப்பொறுப்பாளர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து விடுதியிலிருந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த சிறுமியின் பெற்றோர், கர்ப்பமானது குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்

இதில், தாஸ், சூர்யா உட்பட எட்டு பேரும் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வர எட்டு பேர் மீதும் சிறுமியின் பெற்றோர் நாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த எட்டு பேர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், தாஸ், சூர்யா, ரூபன் கார்ல் மார்க்ஸ், வீரையன், கோகுல் ஆகிய ஐந்து பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள பொன்னையன், முத்து, முருகன் ஆகிய மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்திய 3 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details