கிழக்கு கடற்கரையில் மீன்களின் இனப் பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 13 வரையில் 60 நாட்கள் மீன் பிடித் தடைக் காலமாக அரசு அறிவித்துள்ளது. இந்த காலங்களில் 6 குதிரைத்திறனுக்கு மேல் உள்ள மோட்டார் இன்ஜின்கள் பொருத்திய படகுகள் மற்றும் இழுவை வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சூடிபிடித்துள்ள பழுது பார்க்கும் பணி:
நாகை மாவட்டத்தை பொறுத்தவரையில் கொள்ளிடம் முதல் கோடியக்கரை வரையிலான 60க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. தற்போது தடை காலத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் படகுளை பழுது நீக்கும் பணியிலும் பராமரிப்பு பணிகளிலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாகை தோணித்துறை பகுதியில் இன்ஜின் பழுது நீக்கம் படகு சீரமைத்தல், வலைகள் மற்றும் மீன்பிடி சாதனைங்களை பழுது நீக்கம் செய்தல், படகுகளில் கடைசல் மற்றும் தச்சு வேலைபாடுகள், கிரீஸ் பூசூதல், வர்ணம் அடித்தல் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியில் நூற்றக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.