கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்கள் கடந்த மூன்று மாதங்களாக கடலுக்குச் செல்லாமலிருந்து வந்தனர். அதையடுத்து ஊரடங்கின் தளர்வுகளின் அடிப்படையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
ஆனால் அனுமதியளித்தும் நாகப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமலிருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் தாலுகா மீனவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நாகூர், உள்ளிட்ட எட்டு கிராம மீனவர்கள் கலந்துகொண்டனர்.