தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டவ்-தே புயலில் மாயமான நாகப்பட்டினம் மீனவர்கள்! - Newstoday

டவ்-தே புயலில் சிக்கி நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான நாகப்பட்டினம் மீனவர்கள் ஒன்பது பேர் மீட்கப்படுவார்கள் என எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

MLA Aloor Shanavas
எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ்

By

Published : May 17, 2021, 3:06 PM IST

நாகப்பட்டினம்:டவ்-தே புயலில் சிக்கி நடுக்கடலில் படகு கவிழ்ந்து நாகப்பட்டினம் மீனவர்கள் ஒன்பது பேர் மாயமாகினர்

கேரளா மாநிலம் கொச்சின் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகு நேற்று (மே.16) டவ்-தே புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் அம்மாவட்டத்தின் அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டையை சேர்ந்த தந்தை, மகன்கள் உள்ளிட்ட ஒன்பது மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர். இந்தச் சம்பவம் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ்

இதனிடையே பாதிக்கப்பட்ட சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மீனவ குடும்பத்தினரை எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் இன்று (மே.17) சந்தித்தார். அப்போது மீனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என மீனவர்களின் உறவினரிடம் அவர் ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கூறுகையில், அரபிக்கடலில் மாயமான தமிழ்நாடு மீனவர்கள் லட்சத் தீவு பகுதியில் கரை சேர்ந்து இருப்பதாக வந்துள்ள செய்திகள் அடிப்படையில், விரைவில் நாகப்பட்டினம் மீனவர்கள் சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நேரு உள் விளையாட்டரங்கம் முன்பாக ரெம்டெசிவிர் கேட்டு தர்ணா!

ABOUT THE AUTHOR

...view details