ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஏழு நாள்களாக நாகை மாவட்டத்தில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கட்டடம் கட்டும் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால், மீனவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்காததால் மீனவ சமுதாயத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இழப்பீடு வழங்க மீனவர்கள் கோரிக்கை ஊரடங்கு உத்தரவை ஏற்று மீன்பிடிக்க செல்லாமல் உள்ள மீனவ குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், விசைப்படகுகளை பழுதுபார்க்க 20 லட்சம் ரூபாயை மானிய முறையில் வங்கிகள் கடனாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா: குளத்தில் மருந்து தெளித்ததால் செத்து மிதந்த மீன்கள்