நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் உள்ளனர்.
கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள் - Nagapattinam fishermen
நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் பலத்த கடல் சீற்றம் நிலவுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
![கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள் Nagai Fisherman](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:05:39:1602390939-tn-ngp-01-furious-sea-script-7204630-11102020100312-1110f-00272-701.jpg)
Nagai Fisherman
கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கடலில் தற்போது வீசும் பலத்த அலையில் சிக்கி படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடையாமல் இருப்பதற்காக மீனவர்கள் தங்கள் படகுகளை பத்திரமாக கரை பகுதிகளில் நிறுத்திவைத்துள்ளனர்.