நாகப்பட்டினம் :வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த நாகமணி என்பவரின் பைபர் படகில் பன்னீர்செல்வம், நாகமுத்து, ராஜேந்திரன் ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று(ஜன.24) மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் மூவரும் நேற்று இரவு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மூன்று பேர் நாகமணியின் படகில் ஏறி மீனவர்களை பயங்கிற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.