கடந்த சில தினங்களாக நாகையில் கனமழை பெய்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் நாகை, கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த முகிந்தன், முருகவேல், வேலாயுதம் உள்ளிட்ட மூன்று பேர் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பி கொண்டிருக்கும்போது, விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த மூவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.