தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'செல்போனால் ஏற்படும் ஆபத்து' - விழிப்புணர்வு கருத்தரங்கம் - cyber crime awareness meeting

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே அரசு கல்லூரி மாணவிகளுக்குச் செல்போனால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கில் சைபர் கிரைம் காவல் துறை தலைவர் தலைமை வகித்தார்.

cyber crime awareness meeting
Nagapattinam cyber crime

By

Published : Mar 15, 2020, 7:40 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்குச் செல்போனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செல்போனால் தங்களை எவ்வாறு காத்துக்கொள்வது, செல்போனால் குற்றங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன, முன்னெச்சரிக்கையாக நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது போன்ற விளக்கங்கள் அளிக்கப்பட்டு கணினி மூலம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

கிராமப்புற மாணவிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள எளிதில் அதிலிருந்து வெளியேறி பாதுகாப்பாக இருப்பதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறது என்பது எடுத்துரைக்கப்பட்டது.

செல்போனால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறை தலைவர் முருகன் தலைமை வகித்து கல்லூரி மாணவிகளுக்கு விளக்க உரையாற்றினார், இதில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளும், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:போட்டோ ஷூட் நிறுவனத்தில் கேமராக்கள் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details