நாகப்பட்டினம்: கடந்த 2020ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கோயில் திருவிழாவிற்காக வெளியூர் சென்றிருந்தபோது, அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 31 வயது நபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து, பின் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கானது நாகை போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்துள்ளது. அப்போது, வழக்கு விசாரணையில் அந்நபர், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.