நாகை மாவட்டம் சீர்காழியை அருகே மாணிக்கவாசலில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஓம்சக்தி மாரியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் பவுர்ணமி விழா கடந்த 13ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆச்சாள்புரம் கோயில் திருகுளக்கரையிலிருந்து திரளான பக்தர்கள் விரதமிருந்து பால் குடம் எடுத்தனர்.
வெகு விமரிசையாக நடைபெற்ற ஆடி பவுணர்மி விழா!
நாகப்பட்டினம்: சீர்காழி அருகே உள்ள மாணிக்கவாசல் ஓம்சக்தி மாரியம்மன் ஆலயத்தின் 11ஆம் ஆண்டு ஆடி பவுர்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
mariamman
இதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.