நாகப்பட்டினத்தில் மூடப்பட்ட கோயில்கள் மீண்டும் திறப்பு - கிராமபுற கோயில்கள்
நாகப்பட்டினம்: தமிழ்நாடு அரசின் உத்தரவை தொடர்ந்து மாவட்டத்திலுள்ள 1, 862 கிராமப்புற கோயில்கள் திறக்கப்பட்டன.
கரோனா தொற்று ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டன.
மூடப்பட்டிருந்த கோவில்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழ்நாடு அரசு நேற்று ( ஜூன் 30) உத்தரவிட்டது.
அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற கோயில்கள் அனைத்தும் குறைவான பக்தர்களை கொண்டு திறக்கலாம் என்று இந்து அறநிலையத்துறை கூறியுள்ளது.
அதன்படி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 1, 862 கோயில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம், நாகூர், திருமருகல் உள்ளிட்ட கிராமப்புறங்களில் திறக்கப்பட்ட கோயில்களில் பக்தர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றி வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் போன்றவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.