தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்த்திகை தீபம்; மயிலாடுதுறை அருகே கொட்டும் மழையில் மாவொளி தீபத்தைச் சுற்றி மக்கள் விழிப்புணர்வு! - karthigai maavoli deepam

Karthigai Deepam 2023: கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு பனையின் பொருளில் தயார் செய்யப்பட்டு சுற்றப்படும் மாவொளியை, 25க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பழமையை நினைவூட்டும் மாவொளி தீபத்தை கொட்டும் மழையில் சுற்றி விழிப்புணர்வு!
பழமையை நினைவூட்டும் மாவொளி தீபத்தை கொட்டும் மழையில் சுற்றி விழிப்புணர்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 8:49 AM IST

Updated : Nov 26, 2023, 9:52 AM IST

மயிலாடுதுறை அருகே கொட்டும் மழையில் மாவொளி தீபத்தைச் சுற்றி மக்கள் விழிப்புணர்வு

நாகப்பட்டினம்: கார்த்திகை தீபத்திருநாளில் மறந்து போன மாவொளியை மீட்டெடுக்கும் முயற்சியாக, மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பனையின் பொருளில் தயார் செய்யப்பட்டு சுற்றப்படும் மாவொளியை 25க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நம் தமிழர் வரலாற்றில் மறந்த ஒரு விளையாட்டாக மாறியிருப்பது, மாவொளி என்று சொல்லப்படும் மா ஒளி. கார்த்திகை தீபம் என்றால் வெறும் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது மட்டுமல்ல, இந்த நன்நாளில் ஒற்றுமையோடு ஒன்றிணைந்து ஆடி பாடி மகிழ்வதும் விளையாடுவதும் அடங்கும், அதற்கு சான்றா தான் இந்த கார்த்திகை மாதத்தில் விளையாடப்படும் பழம்பெருமையான மா ஒளி விளையாட்டு எனக் கருதப்படுகிறது.

கார்த்திகை திருநாள் வருவதற்கு ஓரிரு வாரம் முன்பாகவே இந்த மாவொளி தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகள் கிராமங்களில் தொடங்கி விடுகிறது. ஆண், பெண், சிறார்கள் என அனைவரும் பனை மரத்தின் கீழ் இருக்கும் பூக்களை சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.

பின், பனை மரத்தின் பூ எரிக்கப்பட்டு, அந்த கரியை நுனுக்கி, பனை மட்டையில் வைத்து செய்யப்பட்ட மாவொளியை சுற்றுவதன் மூலம் மத்தாப்பு போன்று பொறிகள் கொட்டும். இதன் மூலம் துன்பம் எல்லாம் கொட்டித் தீர்ந்து இன்பம் ஒளியாய் ஒளிரும் என்பது ஐதீகம்.

இதனால் தீபத்திருநாளில் வீடுகளில் விளக்குகள் ஏற்றுவது மட்டுமல்லாமல் இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் மாவொளியைச் சுற்றி மகிழ்ச்சியுடன் கார்த்திகை தீபத்திருநாளை கொண்டாடுவது வழக்கம். கார்த்திகை தீபத்திருநாளில் சுற்றப்படும் இந்த மாவொளியானது, இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களிலும் இந்த விளையாட்டு குறைந்து கொண்டே வருகிறது.

ஒரு சில கிராமங்களில் மட்டுமே இந்த மாவொளி கார்த்திகை தீபத்திருநாளில் தயாரிக்கப்பட்டு, சுற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை யாழ் இயற்கை வேளாண் பண்ணையில் தயார் செய்யப்பட்ட மாவொளியை, 25 நபர்கள் சுற்றும் நிகழ்வு நடைபெற்றது. இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில் தீபாவளி மத்தாப்பு போன்று மத்தாப்பு பொறிகள் பறக்க சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் இந்த மாவொளியைச் சுற்றி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

Last Updated : Nov 26, 2023, 9:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details