தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டாக் டே' புயல்: மாயமான தமிழ்நாட்டு மீனவர்கள், கதறி அழும் உறவினர்கள்! - NAGAPATTINAM

'டாக் டே' புயலின் தாக்கத்தால், கேரளா கடற்பகுதியில் மூழ்கிய தமிழ்நாட்டு மீனவர்களை மீட்கக் கோரி அவர்களது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாக் டே புயல், தமிழ்நாட்டு மீனவர்கள் மாயம், முருகன் துணை படகு, மீனவர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர்
'டாக் டே' புயல்: தமிழ்நாட்டு மீனவர்கள் மாயம்

By

Published : May 15, 2021, 7:29 PM IST

Updated : May 15, 2021, 7:55 PM IST

நாகப்பட்டினம்: கொச்சி மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம், சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், மணிக்கண்டன், அவரது தந்தை இடும்பன், சகோதரர் மணிவேல் உள்ளிட்ட 10 மீனவர்கள் ஏப்ரல் 29ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில், அரபிக்கடலில் உருவான 'டாக் டே' புயல் எச்சரிக்கையை அறிந்த நாகப்பட்டினம் மீனவர்கள், அவசர அவசரமாக விசைப்படகை கொச்சி துறைமுகத்தை நோக்கி திருப்பினர். அதிகாலை மூன்று மணியளவில் அரபிக் கடலை நோக்கி மீனவர்களின் விசைப்படகு வந்துகொண்டிருந்த பொழுது, படகு திடீரென புயலில் சிக்கியது.

அப்போது எழுந்த ராட்சத அலையில் விசைப்படகு தூக்கி வீசப்பட்டு கடலில் மூழ்கியது. புயலில் சிக்கிய 10 மீனவர்கள் நடுக்கடலில் மாயமாகினர். இதுகுறித்து அருகில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள், சாமந்தான்பேட்டை கிராமத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மயாமான மீனவர்களை மீட்கக் கோரி உறவினர்கள் கதறல்

இதனை அறிந்த மீனவர்களின் உறவினர்கள் புயலில் சிக்கி மாயமான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்களையும் மீட்கக் கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர் ஆகியவற்றை கொண்டு தேடுதல் பணியை முடுக்கிவிட வேண்டும் எனவும் அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'டாக் டே' புயல் எதிரொலி: சல்லி சல்லியாக நொறுங்கிய கட்டடம்

Last Updated : May 15, 2021, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details