நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாகப்பட்டினம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணி புரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மீன் வாங்க வரும் வியாபாரிகளுக்கு முகக் கவசம் கட்டாயம் - ஆட்சியர் அறிவுறுத்தல் - ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளி ஒருவர் உயிரிழப்பு
நாகப்பட்டினம்: மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க வரும் வியாபாரிகள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரவின் பி நாயர் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 36,600 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 6 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும். நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திற்கு மீன் வாங்க வரும் வியாபாரிகள், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்தது தொடர்பான விசாரணை நாளை (ஏப்ரல் 13) மேற்கொள்ளப்படவுள்ளது என்று கூறினார்.