மயிலாடுதுறை அடுத்த நீடூர் என்ற இடத்தில் ரயில்வே லெவல் கிராஸிங் உள்ளது. இங்கு பராமரிப்பு பணிகளுக்காக நேற்று காலை முதல் மாலை வரை ரயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது.
மயிலாடுதுறையிலிருந்து, மணல்மேடு, பட்டவர்த்தி, வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பாதையாக இந்த சாலை இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்வது வழக்கம்.
எச்சரிக்கையையும் மீறி ரயில் பாதையைக் கடந்த பொதுமக்கள் இந்நிலையில், முன்னறிவிப்பின்றி ரயில்வே கிராஸிங் திடீரென மூடப்பட்டதால் நீடூரைத் தாண்டிச்செல்லும் வாகனங்கள் சுற்றிச்செல்ல வேண்டியிருந்ததால், பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை மிகுந்த சிரமத்துடன் ரயில் தண்டவாளத்தைக் கடந்துச் சென்றனர்.
இதனால், அந்த பகுதியை கடந்து சென்ற விரைவு ரயில்கள் மிகக்குறைந்த வேகத்தில், ஒலி எழுப்பியவாறே சென்றன. ரயில்வே நிர்வாகம் மாற்றுப்பாதை எதுவும் ஏற்பாடு செய்யவில்லை என்றாலும், குறைந்தபட்சம் தகுந்த அறிவிப்பையாவது செய்திருக்கலாம் என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.