நாகை மாவட்டம் புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (18). இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இன்று (அக்.22) காலை வரை வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து சாந்தகுமாரை அவரது வீட்டார் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் சாந்தகுமார் நாகை சிவசக்தி நகரில் உள்ள செயல்படாத தனியார் பள்ளி கட்டடத்தின் பின்புறம் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.