தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடையில் மது வாங்குவதில் தகராறு; இளைஞர் கொடூர கொலை - நாகபட்டினம் செய்திகள்

நாகை அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கல்லால் அடித்து  கொலை செய்யப்பட்டவர்
மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டவர்

By

Published : Nov 13, 2021, 9:38 AM IST

நாகை:வெளிப்பாளையம் அருகே தாமரைக்குளம் தென்கரையைச் சேர்ந்த மாரியப்பன். இவர் நாகை மருந்து கொத்தளச் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கியுள்ளார். அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களும் மது வாங்கியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கொடூர தாக்குதல்

இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் மாரியப்பனை அங்குக் கிடந்த கல்லை எடுத்துத் தலையில் கொடூரமாகத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். படுகாயமடைந்த மாரியப்பன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மாரியப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறை விசாரணை

இதுதொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பியோடியவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தன்னை விடுவிக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details