தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞர் உயிரிழப்பு! - நாகை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

நாகை: பூந்தாழை கிராமத்தில் வீட்டில் மின்சாரம் தாக்கிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

nagai-youngster-dead-in-a-electric-shock
இளைஞர்

By

Published : Dec 19, 2019, 10:39 PM IST

நாகை மாவட்டம் பூந்தாழை கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் ரஞ்சித் குமார் (17). இன்று இவர் அதே பகுதியில் உள்ள வினோத் என்பவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். வினோத் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அவருக்கு ரஞ்சித்குமாரும் உதவியுள்ளார்.

வீட்டில் அறையிலிருந்த பீரோவை ரஞ்சித் நகர்த்தியபோது சுவரிலிருந்த வயரில் பீரோ உரசியதில் மின்கசிவு ஏற்பட்டு ரஞ்சித் குமார் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரஞ்சித் அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து ரஞ்சித் குமாரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பொறையார் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞர் உயிரிழப்பு!

இதையும் படியுங்க: மனைவியை பிரிந்த சோகம்! கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details