காணும் பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் நடைபெற்ற காணும் பொங்கல் விழாவில், திருமணமாகாத 101 இளம் பெண்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு, தோரணங்கள் கட்டி, புதுப்பானையில் பச்சரிசியிட்டு பொங்கல்வைத்தனர்.
அதன்பின்னர், பொங்கல் பானையை அவர்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாகச் சென்று முச்சந்தி மாரியம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.