தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

நாகை: மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, மழலையர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் புதிதாக வந்த குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

By

Published : Oct 26, 2020, 12:54 PM IST

nagai-vidyarambam-celebration
nagai-vidyarambam-celebration

மயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, இளம் மழலையர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிதாக பள்ளியில் சேர்ப்பதற்காக குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களை ஊர்வலமாக அழைத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

புதிதாக பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு நன்றாக படிக்கும் திறன், சரளமாக பேசும், எழுதும் திறன் வளர வேண்டும் என்பதற்காக குழந்தைகளின் நாவில் தேன் தொட்டு வைத்தனர். தொடர்ந்து நெல்மணியில் குழந்தைகளின் கையால் தமிழ் முதல் எழுத்தான 'அ'வை ஆசிரியர்கள் எழுத வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு குரு பிரம்மா, குரு விஷ்ணு என்ற மந்திர வார்த்தைகளை கற்றுக்கொடுத்தனர்.

கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு நெல்மணி, அரிசி, பழங்களை வைத்து படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். இவ்விழாவில் குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

நான் பிரதமரானால் என் முதல் கையெழுத்து இதற்குதான் - தொல். திருமாவளவன்!

ABOUT THE AUTHOR

...view details