கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள் சார்பில் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு தன்னார்வ அமைப்பு சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் இன்று மதிய உணவு விருந்து உபசரிப்பு செய்யப்பட்டது.
தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து உபசரிப்பு! - Treat For Cleaning Staff
நாகை: மயிலாடுதுறையில் தூய்மைப் பணியாளர்களின் சேவையை பாராட்டி தனியார் அமைப்பினர் மதிய உணவு விருந்து அளித்து மரியாதை செலுத்தினர்.

Treat For Cleaning Staff
முன்னதாக தன்னார்வ அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகக்கவசம், கிருமிநாசினி வழங்கி கைதட்டி ஆரவாரம் செய்து தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:வெளிமாநில தொழிலாளர்கள் இரண்டாம் நாளாக ஆர்ப்பாட்டம்