தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் மாலை 6 மணிக்கு முன்பாகவே கடைகள் அடைப்பு!

நாகை: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

nagai traders closed shops earlier than 6 pm
கடைகளை அடைத்த வணிகர்கள்

By

Published : Jun 20, 2020, 2:28 AM IST

Updated : Jun 20, 2020, 7:08 AM IST

நாகை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து வணிகக் கடைகளையும் மாலை 6 மணிக்கு அடைக்க வணிகர் சங்கத்தினர் முடிவெடுத்தனர்.

அதன்படி கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, நாகையில் நேற்று மாலை 6 மணிக்கு முன்பாகவே கடைத்தெரு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மளிகைக் கடை, ஜவுளிக் கடை, காய்கறிக் கடை, பழக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.

கடைகளை அடைத்த வணிகர்கள்

மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என்பதால், கடைக்கு வந்த பொதுமக்கள் பொருள்களை அவசர அவசரமாக வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க:திருவள்ளூரில் முழு ஊரடங்கு: பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

Last Updated : Jun 20, 2020, 7:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details