கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்திற்கு நியாயம் கேட்டு போராடியதற்காக நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அவர் இன்று நிபந்தனை பிணையில் வெளிவந்தார். அப்போது அவருக்கு மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுசெயலாளர் கு. இராமகிருட்டிணன் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நாகை திருவள்ளுவன் "நடூர் பகுதியில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்ததை காவல் துறையினர் விபத்து போல் சித்தரித்துவிட்டனர். உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கேட்டு போராடினால் போராடுபவர்களை மாநில அரசு பொய் வழக்குப்பதிவு செய்து அடக்குகிறது” என்றார்.