தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் கரும்பு விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை - Sugarcane price drop in Nagai

நாகை: மயிலாடுதுறையில் அதிக விளைச்சலால் கரும்பு விலை கடும் வீழ்ச்சியடைந்தது அதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கரும்பு விலை கடும் வீழ்ச்சி
கரும்பு விலை கடும் வீழ்ச்சி

By

Published : Jan 16, 2020, 5:03 PM IST


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கரும்பு விற்பனை கடும் வீழ்ச்சியடைந்தது. ஆண்டுதோறும் பொங்கலுக்கு ஐந்து தினங்களுக்கு முன்பே கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம்.

மயிலாடுதுறையில் சில்லரை விற்பனையாளர்கள் 18க்கு ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பை வாங்கி வந்து 40 ரூபாய்க்கு விற்றனர்.

கரும்பு விலை கடும் வீழ்ச்சி

இந்த ஆண்டு கரும்பு அதிக விளைச்சல் காரணமாக விவசாயிகளிடம் தேங்கியது. இதனால் விவசாயிகளே தங்களிடம் தேங்கியிருந்த கரும்பை தாங்களே நேரடியாக கிராமம் கிராமமாகச் சென்று விலை மலிவாக விற்பனை செய்துள்ளனர்.

ஆகவே, நகரப் பகுதிகளில் கரும்பு வாங்கும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்தது. 40 ரூபாய்க்கு விற்பனையான கரும்பு, இன்று 8 ரூபாய் அளவிற்கு விலை குறைந்தது. மேலும் அதிகளவில் கரும்பு தேக்கமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ஆகவே மயிலாடுதுறையின் பல்வேறு பகுதிகளில் கரும்பு குவிக்கப்பட்டு வாங்குவதற்கு ஆள் இல்லாமல் இருந்தது.

இதையும் படிங்க:கரும்பு விலை சரிவு: வேதனையில் விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details