நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய்யான பல வதந்திகள் உலாவந்த வண்ணம் இருந்தது.
இது மக்களிடையே தேவையில்லாமல் பீதியை ஏற்படுத்தும்விதமாக இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கூறுகையில்,
"சமூக வலைதளம் அல்லது பொதுத் தளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது மாவட்ட காவல் துறை சார்பில் 13 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இனிவரும் காலங்களில் பொதுமக்கள் அச்சம் கொள்ளும்வகையில் கரோனா தீநுண்மி பெருந்தொற்று தொடர்பாக வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோன்று வெளிமாநிலம், வெளிமாவட்டங்களிலிருந்து குறிப்பாக சென்னை போன்ற பகுதிகளிலிருந்து இ-பாஸ் பெறாமல் வரக்கூடிய நபர்கள் குறித்த விவரங்களை என்ற 1077 எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்" என்றார்.
இதையும் படிங்க:பெண் காவலரை தகாத வார்த்தைகளால் பேசிய திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!