தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2019, 7:30 PM IST

ETV Bharat / state

சீர்காழியில் பனை விதைகள் விதைத்த பள்ளி மாணவர்கள்

நாகை: சீர்காழி பகுதியில் ஆயிரத்து ஒரு பனை விதைகள் விதைக்கும் பணியில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.

பனை விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள குளம், ஏரி, அகலப்படுத்தப்பட்ட சாலைகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில், ஆயிரத்து ஒரு பனை விதைகளை பள்ளி மாணவர்கள் இன்று விதைத்தனர்.

பனை விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்

தமிழ்நாட்டின் பாரம்பரிய மரமான பனை மரத்தை, அழிவில் இருந்து மீட்டெடுக்கவும், காவிரி டெல்டாவை வளம் மிகுந்த பகுதியாக மாற்றவும் பனை விதைகள் விதைக்கப்பட்டதாக மாணவர்கள் கூறினர். இதில் ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 4,000 பனை விதைகள் நடும் கல்லூரி மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details