தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா பாதிப்பு! - tn districts covid 19 cases

நாகை: நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது.

hospital
hospital

By

Published : Jun 17, 2020, 6:26 AM IST

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்கள் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

இந்நிலையில் நேற்று (16-06-20) இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் மட்டும் 43 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் மொத்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. இதில் 59 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மேலும் 107 பேர் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு மக்களிடையே அதிக அளவிலான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காவல் ஆய்வாளருக்கு கரோனா; கோட்டார் காவல் நிலையம் மூடல்!

ABOUT THE AUTHOR

...view details