உலகையே உலுக்கிவரும் கரோனா தீநுண்மி நாகை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்தவண்ணமே உள்ளது.
மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 580 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 898 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 666 பேர் அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்றுவருகின்றனர். மேலும் தொற்று காரணமாக நேற்றுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேற்று (ஆக. 17) மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க...தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை இணையதள முகவரி வெளியீடு!