தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை பஞ்சர் கடை உரிமையாளர் கொலை வழக்கு - 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது! - Nagai district News

நாகை : பஞ்சர் கடை உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் மீது மாவட்ட ஆட்சியர் பிரவீன். பி. நாயர் குண்டர் வழக்கில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Nagai Puncher shop owner murder case
Nagai Puncher shop owner murder case

By

Published : Jul 31, 2020, 3:59 PM IST

நாகை அடுத்துள்ள வாஞ்சூரில் பஞ்சர் கடை நடத்தி வந்த செந்தில் என்பவர், கடந்த மாதம் 23ஆம் தேதி நாகை பூதங்குடி அருகே பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

Nagai Puncher shop owner murder case

அதனைத் தொடர்ந்து முன் விரோதம் காரணமாக கொலை செய்தோம் என மேல வாஞ்சூர் பகுதியைச் சேர்ந்த அகத்தியன், அவரது மகன் தினேஷ், உறவினர்கள் மணிகண்டன், செல்வம் ஆகிய நான்கு பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

Nagai Puncher shop owner murder case

இந்த நிலையில் செந்திலை கொலை செய்ததாக சரணடைந்த நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Nagai Puncher shop owner murder case

சிறையில் இருந்து பிணையில் வரும் சூழலில், அகத்தியன், அவரது மகன் தினேஷ், உறவினர்கள் மணிகண்டன், செல்வம் ஆகிய நான்கு பேர் மீது குண்டர் வழக்குப் பதிவு செய்ய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் நான்கு பேரையும் குண்டாஸ் வழக்கில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details