தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.45 ஆயிரம் மதிப்பிலான கிருமிநாசினி தெளிப்பான்கள் வழங்கிய தொண்டு நிறுவனம்! - கிருமிநாசினி விசைத் தெளிப்பான்

நாகை: மயிலாடுதுறையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.45 ஆயிரம் மதிப்பிலான 10 கிருமிநாசினி விசைத் தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

disinfectant spraying machines
disinfectant spraying machines

By

Published : Jun 12, 2020, 1:37 PM IST

Updated : Jun 13, 2020, 6:04 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாரத்தில் உள்ள நகர்ப்புறம் உள்பட 54 ஊராட்சிகளில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷெல்டர் டிரஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தினர் 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 10 கிருமிநாசினி விசைத் தெளிப்பான்களை மயிலாடுதுறை வட்டாட்சியர் முருகானந்தத்திடம் வழங்கினர்.

இதன்மூலம் மாதம் முழுவதும் நகர்ப்புறத்திலும், ஒரு வாரத்திற்கு ஆறு ஊராட்சிகள் என்ற விகிதத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மயிலாடுதுறையில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை மயிலாடுதுறை வட்டாட்சியர் முருகானந்தம், பீஸ் பவுண்டேஷன் என்ற சேவை அமைப்பினர் ஆகியோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா பரவலிலிருந்து தப்பிக்க புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அமைப்புகள்

Last Updated : Jun 13, 2020, 6:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details