உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் சூழ்நிலையில், ஊரடங்கு உத்தரவை இந்திய அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில், சில இளைஞர்கள் விதிமுறைகளை மீறி பொது இடங்களில் சுற்றித்திரிகின்றனர். இவர்களைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்துவருகின்றனர்.
நாகையில் நகர காவல் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கருவேலங்காட்டுக்குள் சீட்டுக்கட்டு விளையாடியவர்கள், நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள், கடற்கரை ஓரங்களில் அமர்ந்திருந்தவர்கள் என ஏராளமானோர் காவல் துறையினரின் ட்ரோன் கேமராவைக் கண்டவுடன் ஓட்டம் பிடித்தனர்.