நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஏராளமான ஆதரவற்றவர்கள் தஞ்சமடைந்து தங்கள் வாழ்நாளை அங்கேயே கழித்து வருகின்றனர்.
அவ்வாறு ஆதரவற்று தங்கி இருந்த முதியவர் ஒருவர் உடல் நலம் குன்றி இறந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற நாகூர் சிறப்பு துணை ஆய்வாளர் தங்கராஜ் இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய சிலரிடம் உதவிக்கோரியுள்ளார்.
இந்நிலையில் யாரும் முன்வராத சூழலில் தன் சொந்த முயற்சியில் மயானம் எடுத்துச்சென்ற சிறப்பு துணை ஆய்வாளர் தங்கராஜ் தானாக குழி தோண்டி அடக்கம் செய்துள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
இதையும் படிங்க...புண்ணில் நெளிந்த புழுக்கள்: அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் உள்பட மூவர் சஸ்பெண்டு!