நாகை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாவில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் ஏராளமானோர் உயிரிழந்தனர். பொதுமக்கள் 6,065 பேர் உயிரிழக்கக் காரணமான சுனாமி, 2004ஆம் ஆண்டு காலை 8.35 மணியளவில் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களின் நினைவாக சுனாமி நினைவு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இன்று 15ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவ கிராம மக்கள் தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து மெளன ஊர்வலம் சென்றனர். தொடந்து சந்திரபாடி, பூம்புகார், சின்னமேடு, திருமுல்லைவாசல், தொடுவாய், வானகிரி, புதுப்பட்டினம் உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.