மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகையில் நேற்று நடைபெற்றது. இந்த விழா பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழில், முன்னாள் அமைச்சர் ஜெயபால் பெயர் இடம் பெறாததால் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே அங்கு வந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.
அதிமுகவில் வெடித்த மோதல்: பூதாகரமான உட்கட்சி பூசல் - meeting
நாகை: ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட அழைப்பிதழில் முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் பெயர் இடம்பெறாததால் தகராறில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையிலான காவல் துறையினர், தகராறில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் ஆதரவாளர்கள் 17 பேரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் பேக்கரி காமெடி வசனத்தை வைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார்.