நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணி, மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணி, மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்வது வரவேற்கத்தக்கது. இதனை அரசியலாக்க வேண்டாம். தமிழில் அர்ச்சனை செய்ய போதிய ஓதுவார்கள், குருக்கள் இருப்பதை பொறுத்து அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.