தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரியாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தொடக்கம் ! - எம்எல்ஏ ராதாகிருஷ்ணன்

நாகை: மயிலாடுதுறை அருகே காவிரியாற்றின் குறுக்கே மூன்று கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

nagai near cauvery river new bridge construction work started
காவிரியாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தொடக்கம் !

By

Published : Mar 5, 2020, 7:27 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி ஆற்றின் குறுக்கே மாப்படுகை - கடலங்குடி சாலையில் மூவலூர் சட்டர் (நீர் ஒழங்கி) அருகில் ஏற்கெனவே இருந்த பாலம் பழுதடைந்தது.

இதையடுத்து இப்பகுதிக்கு புதிய பாலம் அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அப்பகுதிக்கு ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் பூமி பூஜை இன்று நடைபெற்றது.

காவிரியாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தொடக்கம் !

இதில் கலந்து கொண்ட மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் புதிய பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க:நதிநீர் இணைப்புத் திட்டம் புதிய உந்துதலைப் பெறுகிறது!

ABOUT THE AUTHOR

...view details