நாகை, கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக 2017ஆம் ஆண்டு அறிவித்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு நேற்று ரத்து செய்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அறிவிப்பு அரசின் அரசிதழில் இடம்பெற்றுள்ளது.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து முக்குலத்து புலிகள் அமைப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்! - முக்குலத்து புலிகள் முதல்வருக்கு நன்றி
நாகை: டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அரசுக்கு நன்றி தெரிவித்து நாகை புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
முதல்வருக்கு நன்றி தெரிவித்து முக்குலத்து புலிகள் அமைப்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பினர் நாகை புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க:‘வேளாண் மண்டலத்தைத் தொடர்ந்து பெட்ரோலிய மண்டலம்’ - முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி