நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் உள்ள 19ஆவது வார்டில் பன்றிகள் இறந்துகிடப்பதாலும் கோழி, இறைச்சிக் கழிவுகளாலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவிவருவதாகவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டி பொதுமக்கள் தூக்கனாங்குளம் தென்கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூக்கனாங்குளம் தென்கரை எரகலிதெரு, ஆரோக்கியநாதபுரம் உள்ளிட்ட ஆறு தெருக்களில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிலரால் அதிக அளவில் பன்றிகள் வளர்க்கப்பட்டுவருகிறது. இறந்துபோன பன்றிகளை வாய்க்கால்கள், அப்பகுதியில் உள்ள காடுகளில் வீசுவதாலும் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதாலும் தொற்றுநோய் பரவிவருகிறது.
இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு குளத்திற்குச் செல்லும் நீர்வழிப்பாதையில் ஐந்து நாள்களுக்கு மேலாக பன்றி அழுகிய நிலையில் கிடப்பதால் கடுமையாக துர்நாற்றம் வீசிவருகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து முழக்கமிட்டனர். பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் செய்தியாளர் சந்திப்பு உடனடியாக மாவட்டம் நிர்வாகம் இப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இறந்துபோன பன்றிகள், இறைச்சிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் படிங்க:
பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட புதுக்கோட்டை - நாகை ஆட்சியர்கள் நடவடிக்கை