நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் வாணாதிராஜபுரத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பாக, வெளிநாட்டில் வாழ்ந்து வரும் தமிழ்நாடு தொழிலாளர்களை விரைந்து மீட்கக்கோரி, பதாகை ஏந்திப் போராட்டம் நடைபெற்றது.
வெளிநாடு வாழ் தமிழ்நாடு தொழிலாளர்களை தாயகம் அழைத்து வரக்கோரி போராட்டம்! - tamil migrant labourers
நாகை: வெளிநாடுவாழ் தமிழ்நாடு தொழிலாளர்களை விரைந்து தாயகம் அழைத்து வரக்கோரி, மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணைச் செயலாளர் ஹாஜா சலீம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று, கரோனா நெருக்கடி காரணமாக பல்வேறு நாடுகளில் வேலையிழந்து சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு தொழிலாளர்களை அரசு செலவில் அழைத்து வர வலியுறுத்தியும், தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ள அனைவரையும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தனி நிதி ஒதுக்கி விமானம், கப்பல்களில் அழைத்து வரவும் கோரிக்கையை முன்வைத்தனர்.
மேலும், தமிழ்நாடு அரசு வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக அமைத்துள்ள வாரியத்தை உயிரூட்டி தாயகம் திரும்பும் தொழிலாளர்களின் மறுவாழ்வு, தொழில் தொடங்குவதற்கான திட்டங்களை அறிவிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேரழந்தூர் தாஜூதீன், ஆக்கூர் ஷாஜஹான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:'இலவச மின்சார ரத்தை திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்'