தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேபாளத்தில் தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு! - long jump gold medal player receives grand welcome

நாகை: நேபாளத்தில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

By

Published : Jan 29, 2021, 10:30 PM IST

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் வசிஷ்ட் விக்னேஷ். இவர் சென்னை கிரசென்ட் கல்லூரியில் எம்பிஏ படித்துவருகிறார்.கடந்த 18ஆம் தேதி நேபாளத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.

வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

இவர் 2019ஆம் ஆண்டு நேபாளத்தில் நடந்த ஆறாவது இந்தோ நேபாள் யூத் கேம்ஸ்- ஸ்போர்ட்ஸில் கலந்துகொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

இச்சூழலில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமைசேர்த்த வசிஷ்ட் விக்னேஷ் சொந்த ஊரான தேத்தாக்குடி தெற்கு கிராமத்திற்கு வந்துள்ளார். அவருக்கு ஆரத்தி எடுத்த கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடினர்.

மேலும் அவருக்கு உறவினர்களும், கிராம மக்களும் மாலை, பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். இதன்பிறகு விக்னேஷ் மாட்டுவண்டியில் வீட்டுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க... வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details