இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒருபகுதியாக நாகப்பட்டினத்தில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு பார்வையாளர்கள் செல்ல ஏப்ரல்27ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
ஐம்பது நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட நாகை கலங்கரை விளக்கம் - குண்டுவெடிப்பு தாக்குதல்
நாகை: இலங்கை வெடிகுண்டு தாக்குதலையடுத்து, பாதுகாப்பு கருதி மூடப்பட்ட கலங்கரை விளக்கம் ஐம்பது நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
port
இந்நிலையில், தற்போது 50 நாட்கள் கழித்து கலங்கரை விளக்கத்தை காண மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நாட்களிலும் பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.