மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டித்து தமிழ்நாட்டில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வேலைநிறுத்தம், மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக, நாகை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.