தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை - தனிமைப்படுத்தும் பணி தீவிரம்

நாகப்பட்டினம்: கரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.

தனிமைப்படுத்தும் பணி தீவிரம்
தனிமைப்படுத்தும் பணி தீவிரம்

By

Published : Mar 27, 2020, 11:46 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்கு உட்பட்ட வலிவலம், பனங்காடி, மடப்புறம்,, திருக்குவளை, மீனம்பநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டிலிருந்து வந்த 32 நபர்களின் முகவரி கண்டறிந்து வட்டார சுகாதாரப் பணியாளர்கள், திருக்குவளை வட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய குழுவினர், அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் இடது புற‌ கையில் ஸ்டாம் சீல் ஒன்று வைக்கப்பட்டு, அதில் அவர் எத்தனை நாள் வரை வெளியில் செல்லக்கூடாது என்ற தேதியும் குறிப்பிடப்பட்டது. அதற்கு முன்பாக அவர் வீட்டைவிட்டு வெளியில் எங்கேயும் சென்று சுற்றினால் காவல்துறையினரால் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தும் பணி தீவிரம்

இதைத் தொடர்ந்து மாவட்ட அலுவலர்கள் அவர்களிடம் வைட்டமின் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் படியும், மூன்று வேளையும் வயிறு நிரம்ப நன்கு சமைத்த உணவை உட்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: கரோனாவிற்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details